பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் பிரபலாமான அந்த நடிகையும், விளம்பர நடிகரும் பிரபலமாகினர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அம்மணி எங்கேயோ போகப்போகிறார் என்றார்கள்.
ஆனால், நடந்ததோ வேறு, ஒன்றுக்கும் உதவாத துக்கடா படங்களில் நடித்து தனது இமேஜை தாறுமாறாக டேமேஜ் செய்து கொண்டார். இது ஒருபக்கம் இருக்க, பெரிய முதலாளி வீட்டில் அம்மணி லவ்விய நடிகர் இப்போது சொல்லிக்கொள்ளும்படி சில படங்களில் நடித்து வருகிறார்.
இன்னும், ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம் குடும்பத்தினர். இதனை அறிந்த அந்த நடிகை அவரின் வீட்டிற்கே சென்று என்ன பத்தி நீ என்ன நெனச்சிட்டு இருக்க - மூஞ்சிய ஒடச்சிடுவேன் என கலவரம் செய்து திருமண பேச்சை தடுத்து நிறுத்திவிட்டு வந்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.
காரணம், பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இது சம்பந்தமான சில புகைப்படங்கள் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில், திடீரெனே, அந்த நடிகர் உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது நடிகைக்கு கடும் கோபத்தை ஏற்படுதியுள்ளது.
என்ன பிரச்சனை என்று விசாரித்ததில் இருவரின் காதலுக்கு இடையில் வில்லனாக நிற்பது இருவரும் வேறு வேறு மதம் என்பது தானாம்..?! நடிகைக்கு மதம் மாறுவதில் விருப்பம் இல்லையாம்..! அதே சமயம், அந்த நடிகரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
மதம் மாறினால் தான் நடிகரின் வீட்டார் சம்மதம் சொல்வார்கள் என்பதால், மதம் மாறினார் நடிகை என்ற செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். அதே போல, சமீபத்தில் சின்னைய்யா திருமணம் செய்து கொள்ள கமுக்கமாக மதம் மாறிவிட்டார் ஒரு சீரியல் நடிகை என்பது உபரி தகவல்.
படங்களில் மட்டும் சாதி, மதம் தாண்டியது காதல் என மக்களை தூண்டிவிடுவது. ஆனால், தன் சொந்த வாழ்கை என்று வரும் போது மட்டும் அதனை மறந்து விடுவது...! -என்னத்த சினிமாவோ..? என்னத்த காதலோ..?