பிகில் காட்சி ரத்து செய்யபட்டது உண்மையா..? - தேவி திரையரங்கம் விளக்கம் - ஆடியோ உள்ளே


அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் கடந்த 25-ஆம் தேதி தீபாவளி பரிசாக வெளியான திரைப்படம் ‘பிகில்’. 

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக அட்லீ - விஜய் கூட்டணியில் ‘பிகில்’ படம் உருவாகியிருக்கிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் பல நாடுகளில் ரிலீஸானது. 

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 180 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.திரைக்கு வந்த மூன்று நாட்களில் பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் போதிய கூட்டம் இல்லாததால் பிகில் படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிது படுத்தி காட்டப்பட்டது.

ஏதோ படமே ஓடவில்லை, ப்ளாப் ஆகி விட்டது என்கிற அளவுக்கு இந்த விவகாரம் பூதகரமானது. இந்நிலையில், தேவி திரையரங்க நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக ஒரு நபர் பிகில் படத்தின் காட்சியை ரத்து செய்தது உண்மையா..? என கேள்வி எழுப்பினார். அதற்கு தேவி திரையரங்கு நிர்வாகம் சார்ப்பில் தரப்ப விளக்கம் கொண்ட தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த ஆடியோ,