'இறுதி சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்தப் படத்திலும் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருப்பார்.
ஆகையால் இப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ரித்திகா சிங்.
இந்தப் படத்தை அடுத்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘சிவலிங்கா’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் நடித்துள்ளார்.
இப்போது, பாக்ஸர் மற்றும் ஓ மை கடவுளே என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இறுக்கமான உடையில் உடல் அழகு அப்பட்டமாக தெரியும் வண்ணம் சில புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.