தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இப்படத்தில் ஜாவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதோடு, படமும் ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்தது. அடுத்ததாக இவர் இந்திய விமானி குஞ்சன் சேக்செனா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கார்கில் கேர்ள் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, அவர் நடிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இயக்குனர் தான் யாரென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் முக்கியமான வேடத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த கவர்ச்சியான சிவப்பு நிற உடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






