வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’.
இப்படம் வெளியாகி பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறார். இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.
படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் பூஜை நேற்று போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படத்திற்கு, ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது. அஜித் படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் உலக அளவில் அதனை ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இந்நிலையில், "வலிமை" தலைப்பு குறித்து பிரபல இயக்குனர் ஜி.மோகன் கூறுகையில், இயக்குனர் வினோத் மீது மரியாதை கூடத்தான் செய்கிறது.. நல்ல தமிழ் பெயரை தலைப்பாக வைத்ததற்கு பாராட்டுக்கள் என கூறியுள்ளார்.
வலிமை - இயக்குனர் வினோத் மீது மரியாதை கூடத்தான் செய்கிறது.. நல்ல தமிழ் பெயரை தலைப்பாக வைத்ததற்கு பாராட்டுக்கள் 💐💐💐 #Thala60Pooja— Mohan G 🔥 (@mohandreamer) October 18, 2019