ஹீரோவானார் நீயா நானா கோபிநாத்..! - ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


பிரபல தொலைகாட்சியில் லொள்ளு சபா என்ற சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சந்தானம் சினிமாவில் காமெடியனாகி இப்போது ஹீரோவாகிவிட்டார்.

அதன்பிறகு, தொகுப்பாளராக பணியாற்றி தன்னுடைய பேச்சு திறமை மற்றும் மேனரிசத்தால் ரசிகர்களை கவர்ந்து பாண்டிராஜ் இயக்கிய "மெரீனா" என்ற  படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இப்போது முன்னணி ஹீரோவாகிவிட்டார்.

இந்நிலையில், நடிகர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயனை தொடர்ந்து சீரியல் நடிகர் கவின் மற்றும் ரியோராஜ், தொகுப்பாளர் மா.க.பா ஆனந்த் போன்றவர்களும் சினிமாவில் ஹீரோவாகியுள்ளனர்.


இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா" நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சில திரைப்படங்களிலும் நடித்திருந்த கோபிநாத்தும் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை விஜயகாந்த் நடித்த "கண்ணுப்படப்போகுதய்யா" படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்குகிறார்.

"இது எல்லாத்துக்கும் மேல" என்ற தலைப்பில் உருவாகும் இந்தப்படம் மூலம் குழந்தைகளை மையமாகக்கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் கோபிநாத்திற்கு ஜோடியாக காலா பட ஹீரோயின் ஈஸ்வரி ராவ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்படத்தக்கது.