பாத்து செலவு பண்ணுங்க..! - படக்குழுவுக்கு கறார் உத்தரவு போடும் காமாண்டர் நடிகர்..!


கமாண்டர் நடிகர் கடந்த பல வருடங்களாக பிற தயாரிப்பாளர்கள் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், சமீப காலமாக முன்னணி நடிகர் பலரும் தங்களது சொந்த பணத்தில் படத்தை எடுத்து வருவதை பார்த்து தைரியமாக கோதாவில் குதித்து விட்டார் கமாண்டர்.

இவர் படம் ரிலீஸ் ஆனால் போதும். படம் ஹிட்டோ ஃபளாப்போ.. 70 கோடி என்ற குறைந்தபட்ச வசூலை எட்டி விடுகின்றது. நம்பிக்கையுடன் களத்தில் குதிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

இதனால், தனது உறவினர் மூலம் தன்னுடைய பணத்தை போட்டு படத்தை எடுக்க கிளம்பி விட்டார் கமாண்டர். இந்த படத்திற்காக சம்பளம் எதையும் முன்னதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பெரிய மார்க்கெட்டை வைத்துள்ள முன்னணி நடிகர்களை படத்தில் சேர்த்து வருகிறார். 

நேற்று முன் தினம் வரை பணத்தை பற்றி கவலைப்படாமல் செலவு செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தாராம் கமாண்டர். ஆனால், நேற்று, ஒரு ஆந்திர மன்னரின் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு வெளியானது. 

ஆனால், படத்தின் ஸ்டார் வேல்யூக்காக தான் படம் இன்னும் தியேட்டரில் இருக்கின்றது. இல்லையென்றால், தூக்கி பொட்டியில் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு மோசமான விமர்சனத்தை சந்தித்துள்ளது அந்த படம். 

இத்தனைக்கும், அந்த படமும் ஹீரோவின் சொந்த பணத்தை போட்டு எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பளம் மட்டுமே 170 கோடியை வாரி வீசினர்கள். ஆனால், இப்போது, போட்ட காசு வந்துடுமா..? என்று கலெக்ஷ்னை எண்ணிக்கொண்டிருகிறார்கள். 

மேலும், ஆயுதபூஜை விடுமுறைக்கு வெளியாகும் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொல்லி தெரிந்த தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி ICU-வில் கிடக்கிறது. 

இதனை அறிந்த கமாண்டருக்கு கொஞ்சம் ஜர்க் ஆகி விட்டது போல, படக்குழுவிடம் பணத்தை பார்த்து செலவு பண்ணுங்க என்று கறார் காட்டி விட்டாராம். மேலும், அதிக பொருட்செலவு இல்லாமல் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே சுற்றி வரும் திரில்லர் கதை என்பதால் சற்றே நிம்மதியாக இருகிறாராம் காமாண்டர். 

மேலும், வரவு செலவு கணக்குகளில் கொஞ்சம் தீவிரமாக இருக்கும் படியும் உத்தரவாம். இதற்காகவே, கோடிகளில் சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிவிட்டு சொற்ப லட்சங்கள் தந்தால் போதும் என ஒப்புக்கொண்ட நடிகை ஒருவரை ஹீரோயினாக்கியுள்ளார் கமாண்டர் என்பது உபரி தகவல்.

** ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே..! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே..!