கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதை செய்வேன் - நடிகை ரகுல் பரீத் சிங் ஓப்பன் டாக்


தமிழ், தெலுங்கு தென்னிந்திய சினிமாவில் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த இளம் நடிகை நடிகை ரகுல் பிரீத் சிங் பாலிவுட் படங்களிலும் ஹீரோயினாக கலக்கி வருகிறார் தற்போது, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு நாளும் நமக்கானது என்ற உணர்வோடு வாழ வேண்டும். இன்றைய நாள் நமக்கு கிடைத்து இருக்கிறது. இன்று, நாம் உயிரோடு இருக்கிறோம். இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்காது என்று பேசினார்.

மேலும், நான் ஒரு பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும், டில்லியில் தான் படித்து, வளர்ந்தேன். தென்னிந்தியாவில் தான் எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆந்திராவில் இருக்கும்போது, தெலுங்கு பெண்ணாகவும் சென்னைக்கு சென்றால், தமிழ்நாட்டுப் பெண்ணாகவும் மாறி விடுவேன். 

மும்பைக்கு சென்றால், அங்குள்ள பெண்ணாக தெரிவேன். பஞ்சாபி என்ற எண்ணமே எனக்கு வருவது கிடையாது. ராணுவ குடும்பத்து பெண்ணாக இருப்பதால், நாடெல்லாம் சுற்றி வந்தேன். 

சிறுவயதில், எனது குடும்பத்தினர் ஏதேனும் ஒரு ஊருக்கு போனால், அங்குள்ள சூழலுக்கு ஒன்றி போக மாட்டார்கள். ஆனால், நான் அப்படி கிடையாது, எளிதாக ஒன்றி போய் விடுவேன். 

எல்லோரிடமும் எளிதாக பழக்கம் பிடித்து நெருங்கி விடுவேன். சிலர் புதிய மனிதர்களை சந்தித்தால் அவர்களிடம் பழக வெட்கப்படுவார்கள்..? ஆனால், புதிய மனிதர்களிடம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பழகுவேன். 

வெட்கப்ட்டால், பயந்தால், எதையும் செய்ய முடியாது. எந்த மொழியாக இருந்தாலும், நாம் இந்தியர் என்ற உணர்வுதான் எனக்கு இருக்கிறது. இவ்வாறு ரகுல் பரீத் சிங்கூறியுள்ளார்.