பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ள "உதயம் NH4" பட ஹீரோயின்.!


உதயம் NH4 படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அர்ஷிதா ஷெட்டி தொடர்ந்து ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித், நான் தான் சிவா ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து பட வாய்புகள் கிடைக்காததால் தன்னுடைய காதலரான பிரபல கிரிகெட் வீரரை திருமணம் செய்யவுள்ளார். 

இரு வீட்டாரின் சம்மதத்தோடு வருகிற டிசம்பர் 2-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே. 30 வயதாகும் இவருக்கு தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை அர்ஷிதா செட்டி உடன் வருகிற டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனிஷ் பாண்டே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். ஐ.பி.எல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

--- Advertisement ---