பிகில் vs கைதி - எது உங்களுக்கு பிடித்த படம்..? - DD கூறியுள்ள பதிலை பாருங்க.!


சின்னத்திரை நடிகையாக தனதுவாழ்கையை தொடங்கிய திவ்யதர்ஷினி. பிறகு, தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கினார். பிரபல தொலைகாட்சி ஒன்றில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் அம்மணி. 

இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இப்போது, சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். நல்ல படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளார் அம்மணி. 

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் தீபாவளிக்கு வெளியான படங்களில் எந்த படம் மிகவும் பிடித்துள்ளது என்று கேட்க, தீபாவளிக்கு வெளியான படங்களில் "துப்பாக்கி" திரைப்படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று கூறினார். 

மேலும், இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் எது உங்களை கவர்ந்தது. கைதியா..? அல்லது பிகிலா..? என்று கேட்டதற்கு, இரண்டு படமுமே நன்றாக இருக்கிறது என்று தான் கூறுகிறார்கள். இரண்டையும் விரைவில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement