விஸ்வாசம் vs பிகில் - எது சிறந்த க்ளைமாக்ஸ்..? - கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதில்..! - ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி


நேற்று உலகம் முழுதும் வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. படத்தில் உள்ள சின்ன சின்ன குறைகள் படத்தின் மீதும், நடக்கும் கதையின் மீதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தாமல் போய் விட்டது என்றாலும் எமோஷன் காட்சிகள் படத்தை பக்கவாக தூக்கி நிறுத்து விட்டன. 

இந்நிலையில், கடந்த பொங்கல்பண்டிகையன்று வெளியான விஸ்வாசம் திரைப்படம் அப்பா-மகள் செண்டிமெண்டை அடிப்படையாக கொண்டு உருவாகி தமிழகத்தில் பேட்ட படத்தை விட அதிக வசூல் செய்து மாஸ் காட்டியது.இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் சிந்தாதவரை பார்ப்பது அரிது. 

நடிகரும், பிரபல அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் விஸ்வாசம் vs பிகில் எந்த படத்தின் கிளைமாக்ஸ் உங்களை மிகவும் கவர்ந்தது என்ற கேவிக்கு பதில் அளித்துள்ளார். டிவிட்டாரில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வியில், விஸ்வாசம் படத்தின் க்ளைமாக்ஸ் சிறந்தது என்றால் Like செய்யவேண்டும் என்றும், பிகில் படத்தின் க்ளைமாக்ஸ் சிறந்தது என்றால் RT செய்யவேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதற்கு, விஜயகாந்த் Like செய்து விஸ்வாசம் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தான் சிறந்தது என்று பதில் அளித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் இப்படி ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.




Advertisement