40 வயதை கடந்த விஜய் பட நடிகை பூமிகா, தற்போது லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
2000 ஆம் ஆண்டில் 'யுவகுடு' என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூமிகா. இவர் இரண்டாவதாக நடித்த குஷி படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
அதே போல் தமிழில் இவர் அறிமுகமான பத்ரி இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, நடித்த ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் இன்று வரை பல ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
திருமணத்திற்கு பின் சில காலம் தமிழ் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், மீண்டும் 'யூ டர்ன்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது 'கொலையுதிர் காலம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆசைப்படும் இவர் தற்போது தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.



