சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டில் அட்லி பேசியதை சரமாரியாக வெளுத்து வாங்கியிருக்கிறார் பிரபல ஊடகவியலாளர் பனிமலர். ராஜா ராணி என்ற வெற்றிப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.
இயக்குனர் சங்கரின் அசிஸ்டன்ட் ஆன இவர், தளபதி விஜய்யை வைத்து மூன்று படங்கள் இயக்கி முன்னணி இயக்குனராக முன்னேறி இருக்கிறார். அப்படிப்பட்ட அட்லியை ஊடகவியலாளர் பனிமலர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார்.
அதாவது, அட்லி படம் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் பலருடைய வெறுப்புக்கு உள்ளாக மாட்டார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார்.
மேலும் எங்க அண்ணனுக்கு நான் தான் பண்ணுவேன் அப்படித்தான் பண்ணுவேன் என்று தெனாவெட்டாக கூறியது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இடையே பெரிய வெறுப்பை உண்டாக்கி உள்ளது.
ஆகையால் அப்படிப்பட்ட பேச்சுக்களை கைவிடுவது அட்லியின் வளர்ச்சிக்கு நல்லதாகும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பனிமலர் தெரிவித்துள்ளார்.



