கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்ததும், ஜெயம் ரவியுடன் இவர் நடித்த தாம் தூம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன்பின்னர் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தல தோனியுடன் கிசுகிசுப்பிலும் சிக்கினார் ராய் லட்சுமி. சமீபத்தில் காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ஹிந்தி சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார்.
ஹிந்தி சினிமாவிற்காக தனது உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ராய் லட்சுமி.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் கையில் மதுக்கோப்பையுடன் பிகினி உடையில் தோழிகளுடன் கடற்கரையில் திரியும் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.




