தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் அந்த நான்கு எழுத்து நாயகி. இதுவரை காதல், சென்டிமென்ட் எனும் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற அந்த நடிகை, தற்போது வீரமான கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் வாங்கி வருகிறார்.
உலகம் முழுவதும் இரண்டு பகுதிகளாக வெளிவந்து வெற்றிநடை போட்ட அரச படத்தில் இவர் டம்மியாக்கபட்டாலும் இந்த ஆண்டு வெளிவந்த வரலாற்று படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டார்.
ஆரம்பம் முதலே இந்த நடிகையின் கொள்கைகள் வித்தியாசமாக இருந்து வருகிறது. அதாவது இதுவரை இவர் லிப்-லாக் முத்தக் காட்சிகளில் நடித்ததே இல்லை.
ஆனால், டூ பீஸ் உடையணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளில் கூட நடிக்க ரெடியாக இருக்கும் அந்த நாயகி, முத்தக் காட்சிகள் இருந்தால் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் நடிக்க மாட்டேன் என ஒத்த காலில் நின்று வருகிறாராம்.
ஆனால், பிரபல டான்ஸ் நடிகருடன் அம்மணி நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நடிகையின் குட்டை உடைத்து. இந்நிலையில், முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று முனகுகிறது கோலிவுட்.


