பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மாடல் அழகியான ரைசா வில்சன் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அந்த படத்தை பார்த்தவர்களில் சிலர் ரைசாவின் அழகை புகழந்திருந்தார்கள், சிலரோ இவர் ஹீரோயின் மெட்டீரியல் கிடையாது. தனுஷின் விஐபி 2 படத்தில் வந்த சைடு கதாபாத்திரத்திற்கு தான் சரிபட்டு வருவார் என்று விமர்சித்தனர்.
அந்த படத்தை அடுத்து அவர் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வழக்கமுடையவர் ரைசா.
அவர் வெளியிடும் படங்களை விட அந்த புகைப்படங்களுக்கு அவர் வைக்கும் தலைப்பு தான் விவகாரமாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது படுக்கையில் படுத்துக்கொண்டு டெலிபோனை வைத்துகொண்டு "என்னுடைய லேண்ட்லைனுக்கு கால் பண்ணுங்க" என்று கூறியிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் இப்படி மொட்டையா சொன்னா எப்படி, போன் நம்பரை குடுங்க என்றுகிண்டலடித்து வருகிறார்கள்.

