தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் நேற்று மாலை திருமண அழைப்பு ஒன்று நடைபெற்றது.
இதில்
மாப்பிள்ளை ஊர்வலம் அழைப்பிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார்
தடபுடலாக செய்திருந்தனர்.
ஆனால் மாப்பிள்ளை அழைப்பிற்காக பாட்டு கச்சேரி ஏற்பாடு
செய்யவில்லை என கூறி மாப்பிள்ளை குருப்பில் இருந்த சில போதை ஆசாமிகள் பெண் வீட்டாரிடம்
சண்டை போட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஆண், பெண் வித்தியாசம் இன்றி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் கையில் கிடைத்த சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் ஆகியவற்றை பறக்கவிட்டு தாக்கினார்கள்.
மேலும், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு ஒருவரை, ஒருவர் தாக்கியதில்,
பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும்
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,அந்த கலவரத்தை தன்னுடைய கைப்பேசியில் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோ காட்சி இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.
அந்த வீடியோ காட்சி இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.


