இப்படி அசால்டாக பேக் ஃப்ளிப் அடிக்கும் இளம் நடிகை யார் என்று தெரியுமா..? - வைரலாகும் வீடியோ


நடிகை ராஷ்மிகா மந்தண்ணா (ரஷ்மிகா மந்தனா) பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். 

பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர். இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார். 

இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது, இவர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்தில் ஒரு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் செய்யும் சாகசங்களை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர், இதோ நீங்களும் பாருங்கள்.