பிரபல தமிழ் நடிகை வீட்டில் அதிரடி ரெய்டு - சிக்கியது எப்படி..? - பரபரப்பு தகவல்


விஜய், அஜித், சத்யராஜ், அருண் விஜய், ஜீவா என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் நடிகை ராசி மந்த்ரா. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள ராசி மந்த்ரா வீட்டில் கடந்த சில தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடந்தி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனம் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி அவர்களது இடங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சோதனை நடந்தது. அந்த நிறுவனத்திற்கு மிக நெருக்கமாக செயல்பட்டு வந்தவர் நடிகை மந்தரா. அந்த நிறுவன உரிமையாளரின் நெருங்கிய உறவினர் இவர் என்று கூறுகிறார்கள்.

இதனால் தான் ராசி மந்த்ரா வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. அவரது வீட்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது வீட்டில் இருந்து பணம் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்கிறார்கள். 

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்தால் தான் வரி ஏய்ப்பு செய்தார்களா..? என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--