மனைவியை பற்றி பப்ளிக்-ல இப்படியா கமென்ட் கொடுப்பது..! - விராட் கோலியை விளாசும் ரசிகர்கள்..!


கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் சிறந்த மீடியா பிரபலங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இவர்கள் எப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் இணைந்து பதிவிடுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த பதிவு வைரலாகிவிடும். அனுஷ்கா கோலியுடன் பதிவிட்ட புகைப்படம் ஒன்று மில்லியன் லைக்குகளை தாண்டி வைரலாகிறது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்டபுகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளியுள்ளது. ஆனால், அந்த புகைப்படத்திற்கு விரார் கோலி கொடுத்துள்ள தலைப்பு தான் ரசிகர்களிடையே விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ஆம், நேற்று இரவு இந்த ஹாட்டியுடன் படம் பார்க்க வந்த போது என்று தலைப்பிட்டுள்ளார் விராட். இதனை பார்த்த ரசிகர்கள், ஹாட்டியோ.. ஸ்கூட்டியோ அதை உங்கள் மனைவியிடம் கூறுங்கள். 

உங்கள் மனைவியை பற்றி ஏன் ஊருக்கு கூறிக்கொண்டிருகிறீர்கள் என்று விளாசி வருகிறார்கள்.