‘பாபநாசம்’, படத்தில் கமலின் மகளாக நடித்தவர். மேலும் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தில் தங்கையாக நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது இவர் தெலுங்கிலும், கன்னட படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.தெலுங்கு படங்களில் அதிகமாக வாய்ப்பு கிடைப்பதால் ஹைதராபாத்தில் ஒரு வீடுவாங்கி அங்கேயே குடி சென்றுவிட்டார் அம்மணி.
நிவேதா தாமஸை பொறுத்தவரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும், ஹோம்லியான லுக்கிலும் தான் நடிப்பார்.நேற்று, (நவம்பர் 2) தனது பிறந்த நாளை கொண்டாடிய இவர் தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கிறங்கடிக்கும் பார்வையை வீசி இளசுகளை கவர்ந்துள்ள அவரது புகைப்படங்கள் இதோ,