பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம் - வண்டை வண்டையாக கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!


பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தன்னை விட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகி விட்டார். 

விடுமுறை நாட்களில் அம்மணி அடிக்கும் கூத்திற்கு அளவே இருக்காது.கடற்கரையில் கணவனுடன் ரொமான்ஸ் செய்வது, நடு கடலுக்கு சென்று தவறி விழுந்து தத்தளிப்பது. கப்பல் பணியாளர்கள் காப்பற்றிய பின்பு படகில் அமர்ந்து கொண்டு தம் அடிப்பது. என ஒரே அஜால் குஜால் தான்.

இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். முகமூடி உடன் இருக்கும் புகைபடம் தான் அது. டெல்லியில் தற்போது நிலவி வரும் காற்று மாசு காரணமாக இங்கு வாழ்வதே கடினமாக இருக்கிறது என கூறினார் பிரியங்கா சோப்ரா. 

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை வண்டை வண்டையாக கழுவி ஊத்தி வருகிறார்கள். மொதல்ல, சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் அப்புறம் காற்று மாசு, கடல் மாசு என்று விமர்சனம் செய்யலாம் என்று நேற்று முதல் திட்டி வருகிறார்கள்.


--- Advertisement ---