தமிழ் சினிமாவில் புரட்சி நடிகர் என்றால் இவர் தான். ஒரு காலத்தில் நடிகராக கப் சிப் என வலம் வந்துகொண்டிருந்த இவர் திடீரெனே தயாரிப்பாளர், அதுக்கு தலைவர் , இதுக்கு தலைவர் என அதிரடி காட்டினார்.
சமீபத்தில் அரசியலில் கூட முட்டிமோதி பார்த்தார். ஆனால், அரசியல் வேலைக்கு ஆகவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து பொழப்ப ஓட்டுவதை பார்ப்போம் என வந்த அவர் கல்யாணம் பண்ணிக்க தயாரானார்.
ஆனால், கல்யாணம் நிச்சயதார்த்தம் நடந்ததோடு முடிந்து விட்டது. இதனால்,விரக்தியில் இருந்தவர் இனிமே பாருங்கடா என்னோட ஆக்ஷனை என்று அதிரடி காட்டினார். ஆனால், தன்னுடைய ஆக்ஷனால் வில்லன்களை பறக்கவிடுவார் என்று பார்த்தால் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை பறக்கவிட்டுவிட்டார்.
வெளியான அனைத்து இடங்களிலும் செம்ம அடி வாங்கியது தலைவரின் ஆக்ஷனான படம். என்னடா இது இப்படி அடி மேல அடி விழுது என சோர்ந்து போன நடிகருக்கு அக்கடதேசத்து ஸ்ரீ நடிகை ஒருவரால் முதலுக்கே மோசமாகியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர் போன அந்த ஸ்ரீ நடிகை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகருக்கும், அனகோண்டாவிற்கும் இருக்கும் எசக்கு பிசக்கான தொடர்பை பேச அந்த நேர்காணல் வைரலாகி நடிகரின் பெயரை டேமேஜ் ஆக்கியுள்ளது.
போதாக்குறைக்கு, நெட்டிசன்கள் ஒரு பக்கம் இதை வைத்து மீம்களை பறக்க விட மனம் நொந்து போயுள்ளாராம் நடிகர்.
