விமல் ஹீரோவாக நடித்த ‘களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.
அதையடுத்து பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு பேரும் புகழையும் தேடித் தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் மனதை ஈர்த்தாலும், சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ’90 எம்.எல்.’ படம் அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்து விட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து அண்மையில், காஞ்சனா 3 மற்றும் களவாணி 2 படம் வெளியானது. தற்போது நடிகை ஓவியா ‘ராஜபீமா' மற்றும் 'ப்ளாக் காபி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக இவருக்கு பட வாய்புகள் மிகவும் குறைந்து விட்டது. ஆனால், அது பற்றியெல்லாம் அம்மணிக்கு கவலையே இல்லை. மேலும், சமூக வலைதலங்களிலும் அம்மணி ஆக்டிவாக இல்லை.
உங்களுடையலேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று கேட்ட ஆர்மியினருக்காக கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து பின்னோக்கி சாய்ந்த படி ஆபத்தான செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆபத்தான செல்ஃபிக்களால் உயிரிழப்புகள் நடந்து வரும் சூழலில் இது போன்ற ஆபத்தான செல்ஃபியை வெளியிடலாமா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



