1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார்.
இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.ஸ்ரீதேவியை ரோல் மாடலாக கொண்டு எத்தனையோ நடிகைகள் நடிக்க வந்துள்ளனர்.
தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர்.50 ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தெற்கில் பிறந்து வடக்கில் சென்று வெற்றிக் கொடி நாட்டினார்.
அப்போது இருந்த போட்டியில் இவரும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர் தங்கியிருந்த ஓட்டலில் மாரடைப்பால் உயிரிழந்தார்.இது இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத
ன் நிலையில் ராக்கி என்ற பெண்ணின் டிக்டாக் வீடியோ பார்த்த நெட்டிசன்கள் அவர் ஸ்ரீதேவி போலவே இருப்பதாக கூறி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவரது விடியோக்களை அதிகம் பரப்பி வருகின்றனர்.


