ரிலீஸ் ஆனது எனை நோக்கி பாயும் தோட்டா - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க.? - வாங்க பாக்கலாம்..!


ரொமான்டிக் த்ரில்லரான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் ரகு என்கிற சாதாரண வீட்டுப் பிள்ளையாக நடித்திருக்கிறார். அவர் நடிகையான லேகாவை (மேகா ஆகாஷ்) பார்க்கிறார் காதலில் விழுகிறார். 

லேகாவுக்கும் ரகு மீது காதல் ஏற்படுகிறது. ஒரு நடிகையை காதலித்தால் அந்த நபருக்கு என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்பதை திரையில் நேர்த்தியாக காட்டியுள்ளார் கவுதம் மேனன். 

தனுஷின் அண்ணனாக சசிகுமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஒரு காதலால் தனுஷின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் என்பது தான் கதை.

கடந்த இரண்டு வருடங்களாக பொட்டியில் தூங்கி கொண்டிருந்த இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு வாங்க பாப்போம்..!