ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள், இவர் கதவையே வச்சி இருக்காரே.! - நிவேதா பெத்துராஜின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்


தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்தப் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார். 

போகப் போக அவர் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ‘டிக்டிக்டிக்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும், ஜகஜால கில்லாடி மற்றும் பொன்மாணிக்கவேல் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரவுள்ளன. ஆனால், சொல்லிக்கொள்ளும் படி இப்போதைக்கு எந்த பட வாய்ப்பும் அம்மணிக்கு. 


இந்நிலையில், தன்னுடைய முதுகின் அழகு பளீச்சென தெரியும்படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள், இவர் கதவையே வச்சி இருக்காரே என்று கலாய் கருத்துக்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.