ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்..! - குவியும் லைக்குகள்


இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா சர்மா. பல்வேறு வெற்றிப்படகுகளில் நடித்துள்ள இவர் பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாக திகழ்கிறார். 

பாலிவுட் நடிகையாக மட்டுமே இருந்த இவரை ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ரப்னே பனாதி ஜோடி" என்ற திரைப்படம் இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது. இந்த படத்தின் வெற்றிக்குபிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

மேலும், இவர் ஒரு படத்திற்கு ரூ 8 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அதுமட்டும் இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் எந்த ஒரு விழாவிலும் கலந்துகொள்ளாமல் இருந்த அனுஷ்கா சர்மா சமீபத்தில் நடந்த "வோக்" பத்திரிகை அட்டைப் படத்திற்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி லைக்குகள் குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.