புட்டு புட்டு வைக்கிறாரே..?!? - மாளவிகா விவரமான பொண்ணுதான்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை மாளவிகா மோகனனுக்கு, தங்க நகைகள் என்றால் அவ்வளவு பிரியமாம்.

இது குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ''தங்க நகைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும், தங்கம் குறித்து, எனக்கு பல தகவல்கள் தெரியும். தூய்மையான தங்கம் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதால், அதில் நகை செய்ய முடியாது. 

எனவே, தங்கத்துடன் குறிப்பிட்ட அளவு, வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவற்றை சேர்த்து நகை செய்வார்கள். இந்த உலோகங்கள் தங்கத்தில் எந்த அளவில் கலக்கப்படுகின்றன என்பதை வைத்தே, 14, 18, 22, 24 காரட் என, தங்கத்தை அளவீடு செய்கின்றனர். 

24 கேரட் தங்கம் என்பது தான் 99.9 சதவீதம் துாய்மையான தங்கம் என்று
கூறியுள்ளார்.

ம்ம்ம்... விவரமான பொண்ணு தான்..!!