கவர்ச்சியாக நடித்ததால் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை..!


பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தன்னா. கிரிக் பார்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி. தொடர்ந்து, கடந்த ஆண்டு கீதா கோவிந்தம் என்ற படம் இவரை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது. 

தற்போது தமிழில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். எப்போதும் துருதுருவென இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிக்க வந்ததால் தான் இழந்ததை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, சினிமாவில் வளர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. படங்கள் தாண்டி மக்களிடம் நாம் பழகினால் நம்முடைய படம் மக்களுக்கு செல்லும் என புரிந்து கொண்டேன்.

நான் அறிமுகமான முதல் படமான "கிரிக் பார்ட்டி" தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தேன். இதை பார்த்து என்னுடைய அக்கம் பக்கத்து வீட்டினர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். 

அது வெறும் நடிப்பு என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அது கூட பராவயில்லை, சில நண்பர்கள், தோழிகளும் நான் சினிமாவுக்கு வந்ததால் என்னுடன் நட்பை முறித்துக்கொண்டனர். இது எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.