தமிழில் முடி சூடா மன்னனாகவும், தனி காட்டு ராஜாவாகவும் பயணித்து வருகிறார் ஹெட் நடிகர். இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்து விடமாட்டோமா..? என ஏங்கும் நடிகைகள் ஏராளம். ஆனால், பாருங்க அவருக்கு மகளாக இரண்டு படங்களில் நடித்த பேபி நடிகை ஏன் நடித்தோம் என கதறி வருகிறார்.
தற்போது 15 வயதை எட்டியுள்ளபேபி நடிகை ஹீரோயின் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால், சற்றே கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு விட்டால் ஹெட் நடிகரின் ரசிகர்கள் பேபியை ரவுண்ட் கட்டி விடுகிறார்கள்.
எங்க ஹெட்டுக்கு மகளா நடிச்சு இருக்கம்மா..! இதெல்லாம் வேணாம்மா..! என்று ஆளாளுக்குஅட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால், ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்புகள் சில நழுவி போய் விட்டதாம்.
இதனை நினைத்து கடும் அப்செட்டில் இருக்கிறார் பேபி நடிகை. ஆனால், எப்படியாவது நான் குழந்தை பொண்ணு என்ற இமேஜை உடைத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார் பேபி.
பத்திரிக்கை பேட்டிகளில் கூட நான் ஒன்னும் பேபி இல்ல என்று ஓப்பனாக கூறி வருகிறார்.இதற்குயாரை சொல்லியும் புரயோஜனம் இல்லை. ஹெட் நடிகரின் ரசிகர்கள் நினைத்தால் தான் உண்டு என்று உதட்டை பிதுக்குகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
