ப்ப்பா...! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட பேபி அனிகா - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படம்


தல அஜீத் மற்றும் அனுஷ்கா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். 

2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் மூலம் மிகப் பிரபலமானவர் அனிகா. அதன்பிறகு தமிழ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உருவெடுத்தார். மீண்டும் இந்தாண்டு துவக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாகவே நடித்தார். 

அஜித்துக்கு இவர்தான் உண்மையான மகள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாகி விட்டனர். மீண்டும் அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. 

அஜித்தின் மனம் கவர்ந்த இந்த குழந்தை நட்சத்திரம் தற்போது பருவக் குமரியாக மாறிவிட்டார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கண்ணு வைத்து வருகின்றனர்.

Previous Post Next Post
--Advertisement--