‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
சினிமாவில் எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை .
இந்த நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அந்த புகைப்படங்கள் வைரல் ஆகின்றனவே தவிர ட்ரென்ட் ஆவது அரிது.
ஆனால், ப்ரியா ஆனந்த் போட்டோ ஷூட் நடத்தினால் மட்டும் பொசுக்கு பொசுக்கென ட்ரென்ட் ஆகின்றது. கடந்த வாரம் தான் ப்ரியா ஆனந்தின் புகைப்படங்கள் ட்ரென்ட் ஆகின. அதனை தொடர்ந்து இப்போதும் இவரது புகைப்படங்கள் ட்ரென்டிங்கில் உள்ளன.
பட வாய்ப்புக்காக திட்டமிட்டே இப்படியான ட்ரெண்டிங் கொண்டு வரப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.





