நிச்சயதார்த்தம் முடிந்து நின்று போன சீரியல் நடிகையின் திருமணம் - ஓடிப்போன காதலன்..! - அவரே கூறிய தகவல்..!


தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர் "ரோஜா". இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா. தமிழில் அறிமுகமான முதல் சீரியலே பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. 

இந்நிலையில், தனது திருமணம் பற்றியும் தன்னுடைய காதலன் பற்றியும் இவர் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி, ராகுல் என்பவதை காதலித்து வந்த இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

ஆனால்,அதன் பிறகு சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போய்கொண்டே இருந்துருக்கின்றது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு காரணமாம். 

இந்த கருத்து வேறுபாட்டை சுமூகமாக தீர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால், பிரியங்காவின் காதலன் ராகுல் மலேசியாவுக்கு ஓடி விட்டாராம். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம்.


ஒரு கட்டத்தில் அவரை மிகவும் கஷ்டப்பட்டு தொடர்பு கொண்ட பிரியங்காவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இதனால, இனிமேல் இது வேலைக்கு ஆகாது எங்களுக்கு இனி எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் பிரியங்கா.