நடிகர் விமல் நடிப்பில் இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை வரலட்சுமி, பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன்.
இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு வாய்ப்பே இல்லை. நான் இதுவரை இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை.
பாண்டியராஜன் , யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படமாக வந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
