இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான "பிரியாணி" படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் நடிகை மேண்டி தாக்கர். பஞ்சாப்-பை பூர்வீகமாக கொண்ட நடிகையான இவர் லண்டனில் படித்து பட்டம் பெற்றார்.
அதனை தொடர்ந்து பஞ்சாபி சினிமா துறையில் 2010-ம் நுழைந்த மேண்டிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான "பிரியாணி" படத்தின் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் முக்கியமான கதாபாத்திரம். மேலும், மிஸ்ஸிஸிப்பி நதி என்ற பாடலில் செம்ம ஹாட்டான மூவ் மெண்டுகளை போட்டு தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தார்.
அதனை தொடர்ந்து, கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தில் ஆடி காரு லேடி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதன் பிறகு இவருக்கு தமிழில் இதுவரை வாய்ப்பு எதுவும் வரவில்லை.
32 வயதாகும் இவர் இதுவரை 14 பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். தற்போது, Yes I Am Student என்ற பஞ்சாபி படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வாய்ப்பு வந்தால் இப்போதும் நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி.




