மேக்கப் போடாமலேயே நீங்க அப்படி தான் இருக்கீங்க..! - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பிரபு, கமல், சத்யராஜ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 

சத்யராஜுடன் இணைந்து நடித்த ‘அமைதிபடை’ படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. மேலும் ‘இந்தியன்’ படத்தில் கமலின் பெண்ணாக நடித்திருந்தார் கஸ்தூரி.இந்தப் படமும் இவருக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்று. 

90-களில் ஹீரோயினாக கலக்கிய அநேக நடிகைகள் எங்கே இருகிறார்கள் என்றே தெரியாமல் காணாமல் போய் விட்ட நிலையில் நடிகை கஸ்தூரி மட்டும் தனித்து நிற்கிறார். காரணம், அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தில் மூக்கை நுழைத்து நானும் கருத்து சொல்கிறேன் பேர்வழி நேர பெயரில் எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி விடுவார்.

இது போதாதா..? ஒரு நடிகையின் பெயர் மீடியாவில் அடிபடுவதற்கு.எதையாவது செய்து அடிக்கடி மீடியாவில் சிக்கி வருவபர் நடிகர் கஸ்தூரி. அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெரும் இவர் தற்போது பூதம் போல மேக்கப் போட்டுக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பயமுறுத்தியுள்ளார். 

இதனை பார்த்த சில ரசிகர்கள், மேக்கப் போடாமலேயே நீங்க அப்படி தான் இருக்கீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.




Advertisement