கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார்.
இதுதவிர காலேஜ் குமார், திருத்த நிர்கம்னா படங்களில் நடித்துள்ளார். தற்போது சம்யுக்தா பப்பி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஆனால், இவர் இரண்டாவதாக நடித்த "கோமாளி" திரைப்படம் முதலில் திரைக்கு வந்து விட்டது. ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்திருப்பார் சம்யுதா.
பப்பி திரைப்படத்தில் ஒரு நாயை சுற்றி கதை நடக்கும். இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடிக்கிறார்.
காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் நட்டுதேவ் இயக்குகிறார். படத்தில் நடிப்பது பற்றி சம்யுக்தா கூறியதாவது: தென்னிந்திய நடிகைகள் அனைவருக்கும் தமிழ் சினிமா ஒரு கனவுதான். எனக்கும் அந்த கனவு இருந்தது.
அது இப்போது நிறைவேறியிருக்கிறது. நல்ல கதைக்காக காத்திருந்தேன். அது இப்போது கிடைத்திருக்கிறது. எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு அதிகம். இந்தப் படம் அதை மையப்படுத்தி உருவாவதில் மகிழ்ச்சி என்றார்.
இணையத்தில்அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது செம்ம ஹாட்டான பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இயற்கையே சிறந்த நிவாரணி என்று கூறியுள்ளார். லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,