நடிகர் அஜித்தின் கடைசி ஐந்து படங்கள் வசூல் எவ்வளவு..? - ஒரு பார்வை


''ஒரு முறை அஜித் ரசிகர் ஆகிவிட்டால், சாகும் வரை அஜித் ரசிகர் தான்'' என்பதுவே அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. ஏன் அப்படி? என்று பெரிய ஆய்வுகள் எல்லாம் தேவையில்லை. 

பலரும் குறிப்பிட்டது போல, திரைப்படம் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி அஜித்திடம் அவர் ரசிகர்கள் அவரது எளிமையை கண்டு வியக்கிறார்கள்.

பிரபலம் என்றாலே சர்ச்சை தான் என்றாகிவிட்ட இந்த யுகத்தில். கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துக்கொண்டு எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒருமனிதன் பயணித்து வருவதே ஒரு அதிசயமான விஷயம் தான். 

ரசிகர்களுக்கும் அஜித்திற்கும் இந்த மெல்லிய பிணைப்பு தான் அஜித்தை என்றுமே கொண்டாட வைக்கிறது. இந்நிலையில், இவருடைய கடைசி ஐந்து படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்று இங்கே பார்க்கலாம். 

  1. என்னை அறிந்தால்- ரூ. 106 கோடி
  2. வேதாளம்- ரூ. 125 கோடி
  3. விவேகம்- ரூ. 150 கோடி
  4. விஸ்வாசம்- ரூ. 160-200 கோடி
  5. நேர்கொண்ட பார்வை- ரூ. 181.45 கோடி

--- Advertisement ---