தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இடையில் வெளியான சீமாராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்கள் ஒரு ஸ்பீடு ப்ரேக்கர்களாக அமைந்து விட்டன.
அதனை தொடர்ந்த, கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியான "நம்மவீட்டுபிள்ளை" திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு வருடத்திற்கு முன்பு "இன்று நேற்று நாளை" படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க துவங்கிய சயின்ஸ் பிக்ஷன் படம் பண பிரச்சனை காரணாமாக பாதியிலேயே நிற்கிறது.
அந்த படத்தை பற்றி நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டதற்கு "இந்த படத்திற்காக எனக்கு சம்பளமே வேண்டாம்-ன்னு சொல்லிட்டேன். 75 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஜனவரியில் மீண்டும் ஷூட்டிங் துவங்குகிறது" என உருக்கமாக கூறியுள்ளார்.


