பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடக்கை மேகா ஆகாஷ் நடித்த படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஓராண்டுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது.
ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியீடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை நவம்பர் 29-ந்தேதி வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.
இந்த முறை கண்டிப்பாக படம் ரிலீசாகிவிடும் என்று உறுதிபட கூறுகிறார்கள். காரணம், சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "அசுரன்" படத்தின் அசுர வசூல் தான். அசுரன் வெற்றியால் இந்த படத்தை நல்ல விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் முன் வந்திருக்கிறார்களாம்.
ஆக, அசுரன் படம் மூலம் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.