இந்த உலகத்தில் அவ்வபோது வினோதமான விஷயங்கள் நாள் தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள நன்டஸ் டவுனில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை உடைத்துக் கொண்டு மரம் ஒன்று வளர்ந்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மேலும், அதை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அவை வைரலாகப் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மரத்தைப் பற்றி கட்டு கதைகள் பரவத் தொடங்கியுள்ளன.
காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்திருந்ததைப் பலரும் இது மேஜிக் என கூறி வந்தனர். அதன் பின்னரே அந்த மரம் அவ்வாறு வளர்ந்தது எப்படி என்ற உண்மை வெளிவந்துள்ளது.
அந்த மரம் காரை உடைத்துக்கொண்டு வளரவில்லை. ராயல் டீலக்ஸ் என்ற தியேட்டரால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாம்.



