தமிழில் நடிகர் அர்ஜுன் நடித்த மதராஸி படம் மூலம் 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை வேதிகா.
கடந்த 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு மலைமலை படத்தில் நடித்தார். இடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு பரதேசி படத்தில் நடித்தார். இந்த படம் வேதிகாவுக்கு பெரும் புகழ் பெற்று தந்தது.
கடைசியாக தமிழில் காஞ்சனா 3, வினோதன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது Body என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது.





