எப்ப பாரு அந்த வீடியோ தான்..! - திருச்சி வாலிபரை கைது செய்தது எப்படி..? - அதிரவைக்கும் பகீர் தகவல்..!


கடந்த இரண்டு வாரங்களாக அந்த மாதிரி படங்கள் இணையத்தில் பார்பவர்கள் கதிகலங்கி தான் போயிருக்கிறார்கள். காரணம், இணையத்தில் ஆபாச படங்கள் பார்பவர்களை கைது செய்யப்போகிறோம் என்ற அறிவிப்பு காவல் துறை தரப்பில் இருந்து வந்தது தான்.

இந்நிலையில், முதற்கட்டமாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.இவர் எப்போதும்குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அதனை போலியான முகநூல் கணக்குகள் மூலம் சேர் செய்வதுமாக இருந்து வந்துள்ளார்.

திருச்சியில் உள்ள பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் தான் இந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்.  ஐடிஐ படித்து விட்டு ஏசி மெக்கானிக்காக நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். எப்பபோது, பார்த்தாலும் சோஷியல் மீடியாவில்தான் இருப்பாராம்.


முகநூல் மூலம் நண்பர்களை பிடித்து அவர்களுடன்குழந்தைகள் சம்பந்தபட்ட பலான வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார். அதாவது, முகநூலில் நிலவன், ஆதவன், வளவன் என்ற விதவிதமான பெயர்களில்தான் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். 

பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியும் உள்ளார். இதனால் தான் காவல் துறையினர் இந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸை முதல் ஆளாக கைது செய்துள்ளனர். 

மேலும், அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார். 


அதனை தொடர்ந்து கிறிஸ்டோபரின் செல்ஃபோனை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர் போலீசார். மேலும், இவர் மீது உள்ள இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறுகிறார்கள்.