திருமணமான அந்த நடிகர் மீது கிரஷ் - நடிகை சுனைனா ஒப்பன் டாக்


நடிகர் நகுல் நடிப்பில் வெளியான "காதலில் விழுந்தேன்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுனைனாவை அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தொடர்ந்து சரியான படங்கள் அமையாத காரணத்தினால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு இவரால் வரமுடியவில்லை. 

போதுமான பட வாய்புகள் வராததன் காரணமாக அவர் தற்சமயம் வெப் சீரிஸ், சின்ன படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார். பொதுவாகவே சினிமா நடிகைகள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹீரோ மீது ஈர்ப்பு இருந்தது என கூறுவது வழக்கமான ஒன்று தான். 

அதுபோல ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இவரிடம் உங்களின் கிரஷ் யார் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுனைனா பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதன் முதலில் கிரஷ் வந்தது. Koi Mil Gaya படம் வெளியான போது அது என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது என ஓப்பனாக கூறியுள்ளார்.