தமிழில் ’குத்து’, ’பொல்லாதவன்’, ’வாரணம் ஆயிரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் ஏராளமாக நடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரம்யா, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவை இஷ்டத்துக்கு கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சைகளில் மாட்டினார்.
பா.ஜ.க அரசு மீது அர்த்தமே இல்லாமல் அதீத குற்றச்சாட்டுகளை வைத்ததன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரம்யா எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
இந்நிலையில், இவரது புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்,




