பிக்பாஸ் சுஜா வருணியா இது..? - குழந்தை பிறந்த பின்பு எப்படி ஆகிவிட்டார் பாருங்க..!


தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்து கலக்கியவர் சுஜா வருணி. சினிமாவில் கவர்ச்சி ஆட்டம் ஆடும் ஐட்டம் நடிகையாக மட்டுமே ரசிகர்கள் இவரை பார்த்திருந்தனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு வேறு ஒரு முகத்தை கொடுத்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரம்பத்தில் அவர் செய்யும் விஷயங்கள் ஓவியாவை போலவே உள்ளது என்று தான் மக்கள் கமெண்ட் செய்தார்கள், பின் அவரது குணமே இதுதான் என நிகழ்ச்சி முடிவதற்குள் புரிந்தது. 

அந்நிகழ்ச்சிக்கு பிறகு தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அண்மையில் அவருக்கு அழகிய மகனும் பிறந்தார். 

இந்த நிலையில் சுஜா வருணி தனது மகனுக்கு கிறிஸ்துமஸிற்காக அழகாக அலங்காரம் செய்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் அவரது குடும்ப புகைப்படத்தை பார்த்தவர்கள் பிக்பாஸ் சுஜா வருனியா இது..? என்று ஷாக் ஆனதுடன் அவரை வாழ்த்தி அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.