நடிகைகளால் பிளேபாய் என்று அழைக்கப்படும் ஆர்யா அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்வார். இளம் பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பதே ஆர்யாவின் மிகப்பெரிய பலம்.
சமீபத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் ஆர்யா - சாயிஷா இணைந்து நடித்திருந்தனர்.
கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டு அந்த படம் முடிந்த கையுடன் திருமணமும் செய்து கொண்டனர். புத்தாண்டை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ள இந்த நட்சத்திர ஜோடி அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகள் அள்ளி வருகிறார்கள்.
இந்நிலையில், 2020ம் ஆண்டிற்கு இப்படிதான் ஜம்ப் பண்ணப்போறோம் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள்ஸ்-ன் வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் கணவர் ஆர்யா மீது ஜம்ப் செய்து உப்பு மூட்டை போலஅமர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை ஷாயிஷா. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,



