பிரபல நடிகர் ரோபோ ஷங்கர் தொலைக்காட்சிகளில் ஸ்டேன்டப் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதை தெளிவாக பயன்படுத்தி வருகிறார்.
கேப் விடமால் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
அண்மையில் இவரது மகள் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அவருக்கும் ரசிகர்களிடம் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்நிலையில், நடிகர் ரோபோ ஷங்கரின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அதில், ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


