"அமேசானும் அனகோண்டாவும்" - கிண்டலடித்த ரசிகரை நா கூசும் கெட்ட வார்த்தையில் திட்டிய குஷ்பு..!


தமிழ் சினிமாவில் 90'ஸ்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவரது பப்ளியான தோற்றத்திற்கு அன்றைய கால ரசிகர்கள் முதல் இந்த கால ரசிகர்கள் வரை அடிமைதான். 

அந்த அளவு அழகால் அனைவரையும் கவர்ந்தவர். எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக தனது டுவிட்டர் பக்கத்தை நீக்கினார். 

இதனால் ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் அதற்கான ரிப்ளை குஷ்புவிடம் இருந்த வரவில்லையாம். இந்நிலையில் சமீபத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறிவிட்டது. 

ஆனால் விஷாலும், குஷ்பு குடும்பத்தினரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். அந்த வகையில் குஷ்பு, விஷாலுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதற்கு அவரது ரசிகர்களில் ஒருவர் அமேசான் என குஷ்புவையும் அனகோண்டா என விஷாலையும் குறிப்பிட்டு கிண்டல் அடித்தார். 


அதற்கு கடுப்பான குஷ்பு, உங்க அம்மா என்ன flipkart-ஆ என பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என ஒரு பேட்டியில் குறிப்பிட்டதால் அது சார்பில் பல மீம்ஸ்கள் வலம் வந்தன. ஆனால் அது நடிகர் விஷால் இல்லை என ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.